நெற்பயிருக்கு காப்பீடு: நவ., 30 வரை வாய்ப்பு      முதல்வர் இன்று சேலம் வருகை      நிழற்கூடம் இல்லாததால் மாணவர்கள் அவதி      9ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பிழைகளை திருத்த உத்தரவு      மழையால் கொசு உற்பத்தி அதிகரிப்பு : கூடுதல் பணியாளர்கள் அவசியம்      சேலம் ஜங்சனில் ஓடும் ரெயிலில் இறங்கிய வாலிபர் கால் துண்டானது      சேலத்தில் இருந்து திருமலைக்கு செல்லவிருக்கும் பூமாலைகள்.      சேலம், நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம்      சேலத்தில் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி-விற்பனை பன்னீர்செல்வம் எம்.பி. தொடங்கி வைத்தார்      கூட்டுறவு சர்க்கரை ஆலை தேர்தல்: வெறும் 21.90 சதவீத ஓட்டுப்பதிவு      2ம் வகுப்பு வீட்டுப்பாடம்:கண்காணிக்க சிறப்புக்குழு      வானிலை மையம் கூறியபடி நேற்று துவங்கியது வடகிழக்கு பருவமழை      ரயில்வே பணியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தல்      கொங்கணாபுரத்தில் வேளாண்மை பொறியியல் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை      சேலம் மாநகராட்சி சார்பில் வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு ஊர்வலம்     
Search by alphabets :  A  |  B  |  C  |  D  |  E  |  F  |  G  |  H  |  I  |  J  |  K  |  L  |  M  |  N  |  O  |  P  |  Q  |  R  |  S  |  T  |  U  |  V  |  W  |  X  |  Y  |  Z
நிழற்கூடம் இல்லாததால் மாணவர்கள் அவதி
 

கொளத்தூர்: நிழற்கூடம் இல்லாததால், மாதிரி பள்ளி மாணவர்கள், சாலையோரம் திறந்தவெளியில் காத்திருந்து, பஸ் ஏறும் அவலம் நீடிக்கிறது. கொளத்தூர், சிங்கிரிப்பட்டி ஊராட்சி, மாங்காட்டிலுள்ள, அரசு மாதிரி பள்ளியில், 440 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இதில் பெரும்பாலானோர், சுற்றுப்பகுதி கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள். இவர்கள், தினமும் தங்கள் கிராமத்திலிருந்து, பஸ்சில் மாதிரி பள்ளிக்கு சென்று திரும்புகின்றனர். பள்ளியிலிருந்து, 100 மீட்டர் தூரமுள்ள, கொளத்தூர் - மைசூரு பிரதான சாலைக்கு, மாணவர்கள் நடந்து சென்று, அங்கிருந்து பஸ்சில் செல்கின்றனர். பள்ளி அருகே, சாலையோரம் நிழற்கூடம் இல்லாததால், அவர்கள் பஸ்சுக்கு, வெகுநேரம் திறந்தவெளியில் காத்துக்கிடக்கும் அவலம் நீடிக்கிறது. மழை, கோடைவெயில் காலங்களில், பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அதை தடுக்க, கொளத்தூர் - மைசூரு பிரதான சாலையோரம், பள்ளிக்கு செல்லும் பிரிவு சாலை அருகே, நிழற்கூடம் கட்ட, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Helloo Salem Free Advertisements