நெற்பயிருக்கு காப்பீடு: நவ., 30 வரை வாய்ப்பு      முதல்வர் இன்று சேலம் வருகை      நிழற்கூடம் இல்லாததால் மாணவர்கள் அவதி      9ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பிழைகளை திருத்த உத்தரவு      மழையால் கொசு உற்பத்தி அதிகரிப்பு : கூடுதல் பணியாளர்கள் அவசியம்      சேலம் ஜங்சனில் ஓடும் ரெயிலில் இறங்கிய வாலிபர் கால் துண்டானது      சேலத்தில் இருந்து திருமலைக்கு செல்லவிருக்கும் பூமாலைகள்.      சேலம், நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம்      சேலத்தில் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி-விற்பனை பன்னீர்செல்வம் எம்.பி. தொடங்கி வைத்தார்      கூட்டுறவு சர்க்கரை ஆலை தேர்தல்: வெறும் 21.90 சதவீத ஓட்டுப்பதிவு      2ம் வகுப்பு வீட்டுப்பாடம்:கண்காணிக்க சிறப்புக்குழு      வானிலை மையம் கூறியபடி நேற்று துவங்கியது வடகிழக்கு பருவமழை      ரயில்வே பணியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தல்      கொங்கணாபுரத்தில் வேளாண்மை பொறியியல் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை      சேலம் மாநகராட்சி சார்பில் வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு ஊர்வலம்     
Search by alphabets :  A  |  B  |  C  |  D  |  E  |  F  |  G  |  H  |  I  |  J  |  K  |  L  |  M  |  N  |  O  |  P  |  Q  |  R  |  S  |  T  |  U  |  V  |  W  |  X  |  Y  |  Z
மழையால் கொசு உற்பத்தி அதிகரிப்பு : கூடுதல் பணியாளர்கள் அவசியம்
 

Date : 20 / 10 / 2018 Time : 10 : 53 Am

 

பனமரத்துப்பட்டி: மழைக்காலம் தொடங்கியுள்ளதால், கூடுதல் பணியாளர்களை நியமித்து, கொசுப்புழு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும்.

 

பனமரத்துப்பட்டியில், 20 கிராம ஊராட்சிகள் உள்ளன. கடந்தாண்டில், டெங்கு காய்ச்சல் பரவியபோது, ஒன்றியம் சார்பில், 100 கொசு ஒழிப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். வீடு, வீடாக சென்று, கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்ட அவர்களுக்கு, ஒன்றிய அலுவலகம் மூலம், தினமும், 319 ரூபாய் கூலி வழங்கப்பட்டது. காய்ச்சல் தாக்கம் குறைந்த பின், அப்பணியாளர்களின் எண்ணிக்கை, 20 ஆக குறைக்கப்பட்டது. தற்போது, அடிக்கடி மழை பெய்து வருவதால், குடியிருப்பு பகுதிகளில், ஆங்காங்கே தண்ணீர் தேங்கி, கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. ஆனால், ஊராட்சிக்கு ஒரு பணியாளர் மட்டும் உள்ளார். வீடு, வீடாக சென்று, குடிநீர் தொட்டிகளை ஆய்வு செய்தல், கொசு புழுவை அழிக்க மருந்து ஊற்றுதல், பொது இடங்களில், பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களில் தேங்கிய தண்ணீரை அப்புறப்படுத்தல், புகை மருந்து அடித்தல் உள்ளிட்ட பணிகளில் தொய்வு அடைந்துள்ளன. ச.ஆ.,பெரமனூர், பள்ளித்தெருப்பட்டி ஊராட்சிகளுக்கு, ஒரே கொசு ஒழிப்பு பணியாளர் தான் உள்ளார். மக்கள் தொகை அதிகமாகவுள்ள அமானிகொண்டலாம்பட்டி, நெய்க்காரப்பட்டி ஊராட்சிகளுக்கு, தலா இருவர் உள்ளனர். தற்போது, கொசு உற்பத்தி அதிகரித்து வருவதால், காய்ச்சலால், மக்கள் பாதிக்கும் முன், கூடுதல் பணியாளர்களை நியமித்து, கொசு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்த, சுகாதாரத்துறை, ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Helloo Salem Free Advertisements