நெற்பயிருக்கு காப்பீடு: நவ., 30 வரை வாய்ப்பு      முதல்வர் இன்று சேலம் வருகை      நிழற்கூடம் இல்லாததால் மாணவர்கள் அவதி      9ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பிழைகளை திருத்த உத்தரவு      மழையால் கொசு உற்பத்தி அதிகரிப்பு : கூடுதல் பணியாளர்கள் அவசியம்      சேலம் ஜங்சனில் ஓடும் ரெயிலில் இறங்கிய வாலிபர் கால் துண்டானது      சேலத்தில் இருந்து திருமலைக்கு செல்லவிருக்கும் பூமாலைகள்.      சேலம், நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம்      சேலத்தில் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி-விற்பனை பன்னீர்செல்வம் எம்.பி. தொடங்கி வைத்தார்      கூட்டுறவு சர்க்கரை ஆலை தேர்தல்: வெறும் 21.90 சதவீத ஓட்டுப்பதிவு      2ம் வகுப்பு வீட்டுப்பாடம்:கண்காணிக்க சிறப்புக்குழு      வானிலை மையம் கூறியபடி நேற்று துவங்கியது வடகிழக்கு பருவமழை      ரயில்வே பணியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தல்      கொங்கணாபுரத்தில் வேளாண்மை பொறியியல் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை      சேலம் மாநகராட்சி சார்பில் வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு ஊர்வலம்     
Search by alphabets :  A  |  B  |  C  |  D  |  E  |  F  |  G  |  H  |  I  |  J  |  K  |  L  |  M  |  N  |  O  |  P  |  Q  |  R  |  S  |  T  |  U  |  V  |  W  |  X  |  Y  |  Z
சேலத்தில் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி-விற்பனை பன்னீர்செல்வம் எம்.பி. தொடங்கி வைத்தார்
 

சேலம், 

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை சேர்ந்த பயனாளிகள் உற்பத்தி செய்த பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை சேலம் கடை வீதியில் உள்ள வாசவி மகாலில் நேற்று நடைபெற்றது. இந்த கண்காட்சியை பன்னீர்செல்வம் எம்.பி. ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். கலெக்டர் ரோகிணி குத்துவிளக்கேற்றி கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். கே.வி.ஐ.சி. உதவி இயக்குனர்கள் வசிராஜன், பிரபாகர் ஆகியோர் பி.எம்.இ.ஜி.பி. திட்டம் குறித்து பேசினர்.

 

கண்காட்சியில், கதர் ஆடைகள், மெத்தை, தலையணை, சிறு தானிய உணவு பொருட்கள், காலணிகள், மரசெக்கு எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு உள்ளன. மேலும் 15 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை மத்திய அரசின் மானியத்துடன் வங்கி கடன் மூலமாக புதிதாக கிராமம், நகர்ப்புறங்களில் தொழில் தொடங்க இக்கண்காட்சியில் உள்ள அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தொழிற்துறை பொதுமேலாளர் ராமச்சந்திரன், காதி கிராம தொழில் துறை வாரிய உதவி இயக்குனர் ரூபி அலிமாபாய், சர்க்கார் கொல்லப்பட்டி கிராம சேவா சங்க பொதுமேலாளர் கல்யாணசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கண்காட்சி மற்றும் விற்பனை இன்று (வெள்ளிக்கிழமை), நாளை (சனிக்கிழமை) என 2 நாட்கள் நடக்கிறது.

 

Helloo Salem Free Advertisements