நெற்பயிருக்கு காப்பீடு: நவ., 30 வரை வாய்ப்பு      முதல்வர் இன்று சேலம் வருகை      நிழற்கூடம் இல்லாததால் மாணவர்கள் அவதி      9ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பிழைகளை திருத்த உத்தரவு      மழையால் கொசு உற்பத்தி அதிகரிப்பு : கூடுதல் பணியாளர்கள் அவசியம்      சேலம் ஜங்சனில் ஓடும் ரெயிலில் இறங்கிய வாலிபர் கால் துண்டானது      சேலத்தில் இருந்து திருமலைக்கு செல்லவிருக்கும் பூமாலைகள்.      சேலம், நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம்      சேலத்தில் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி-விற்பனை பன்னீர்செல்வம் எம்.பி. தொடங்கி வைத்தார்      கூட்டுறவு சர்க்கரை ஆலை தேர்தல்: வெறும் 21.90 சதவீத ஓட்டுப்பதிவு      2ம் வகுப்பு வீட்டுப்பாடம்:கண்காணிக்க சிறப்புக்குழு      வானிலை மையம் கூறியபடி நேற்று துவங்கியது வடகிழக்கு பருவமழை      ரயில்வே பணியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தல்      கொங்கணாபுரத்தில் வேளாண்மை பொறியியல் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை      சேலம் மாநகராட்சி சார்பில் வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு ஊர்வலம்     
Search by alphabets :  A  |  B  |  C  |  D  |  E  |  F  |  G  |  H  |  I  |  J  |  K  |  L  |  M  |  N  |  O  |  P  |  Q  |  R  |  S  |  T  |  U  |  V  |  W  |  X  |  Y  |  Z
கூட்டுறவு சர்க்கரை ஆலை தேர்தல்: வெறும் 21.90 சதவீத ஓட்டுப்பதிவு
 

ஆத்தூர்: கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக குழு உறுப்பினர் பதவிக்கு, 17 இடங்களில் நடந்த தேர்தலில், 21.90 சதவீத ஓட்டுகளே பதிவாகியுள்ளன.

 

நாமக்கல் மாவட்டம், மோகனூரில் உள்ள, சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக குழு உறுப்பினர் தேர்தலில், பொது - ஒன்பது, பெண்கள் - ஐந்து, எஸ்.சி., எஸ்.டி., - மூன்று என, 17 பேர் தேர்வு செய்யப்பட வேண்டும். பெண்கள் மற்றும் எஸ்.சி., எஸ்.டி., பிரிவில், எட்டு பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பொது பிரிவு நிர்வாக குழு உறுப்பினருக்கு, 32 பேர் வேட்பு மனு செய்ததால், ஓட்டு பதிவு நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. சேலம், நாமக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில், நான்கு மண்டலங்களாக பிரித்து, 17 இடங்களில், நேற்று காலை, 8:00 முதல், மாலை, 5:00 மணி வரை, ஓட்டுச்சீட்டு மூலம் ஓட்டுப்பதிவு நடந்தது.

 

இதுகுறித்து, ஆலை தேர்தல் அலுவலர் முருகேசன் கூறியதாவது: நாமக்கல் - 13, திருச்சி - மூன்று, சேலம் - ஒன்று என, 17 இடங்களில் ஓட்டுப்பதிவு நடந்தது. 32 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 33 ஆயிரத்து, 97 உறுப்பினர்களில், 7,249 பேர் மட்டுமே ஓட்டுப்பதிவு செய்தனர். இது, 21.90 சதவீத பதிவு. அக்., 12(இன்று), சர்க்கரை ஆலை திருமண மண்டபத்தில், ஓட்டுகள் எண்ணப்பட்டு, ஒன்பது பேர் அறிவிக்கப்பட உள்ளனர். தேர்தல் அறிவிப்பு வெளியிட்டபோதும், ஓட்டு பதிவு சதவீதம் குறைந்தது குறித்து காரணம் தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

 
Helloo Salem Free Advertisements