நெற்பயிருக்கு காப்பீடு: நவ., 30 வரை வாய்ப்பு      முதல்வர் இன்று சேலம் வருகை      நிழற்கூடம் இல்லாததால் மாணவர்கள் அவதி      9ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பிழைகளை திருத்த உத்தரவு      மழையால் கொசு உற்பத்தி அதிகரிப்பு : கூடுதல் பணியாளர்கள் அவசியம்      சேலம் ஜங்சனில் ஓடும் ரெயிலில் இறங்கிய வாலிபர் கால் துண்டானது      சேலத்தில் இருந்து திருமலைக்கு செல்லவிருக்கும் பூமாலைகள்.      சேலம், நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம்      சேலத்தில் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி-விற்பனை பன்னீர்செல்வம் எம்.பி. தொடங்கி வைத்தார்      கூட்டுறவு சர்க்கரை ஆலை தேர்தல்: வெறும் 21.90 சதவீத ஓட்டுப்பதிவு      2ம் வகுப்பு வீட்டுப்பாடம்:கண்காணிக்க சிறப்புக்குழு      வானிலை மையம் கூறியபடி நேற்று துவங்கியது வடகிழக்கு பருவமழை      ரயில்வே பணியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தல்      கொங்கணாபுரத்தில் வேளாண்மை பொறியியல் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை      சேலம் மாநகராட்சி சார்பில் வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு ஊர்வலம்     
Search by alphabets :  A  |  B  |  C  |  D  |  E  |  F  |  G  |  H  |  I  |  J  |  K  |  L  |  M  |  N  |  O  |  P  |  Q  |  R  |  S  |  T  |  U  |  V  |  W  |  X  |  Y  |  Z
2ம் வகுப்பு வீட்டுப்பாடம்:கண்காணிக்க சிறப்புக்குழு
 

Date : 09/10/2018 Time : 11:46 AM

 

சேலம்;பள்ளிகளில், இரண்டாம் வகுப்பு வரை, வீட்டுப்பாடங்கள் கொடுக்கப்படுவது குறித்து கண்காணிக்க, சிறப்பு குழுக்களை ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில், இரண்டாம் வகுப்பு வரை, பள்ளிக்குழந்தைகளுக்கு, வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை அமல்படுத்தும் வகையில், தொடக்கக்கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

 

அனைத்து பள்ளிகளிலும், முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது. தமிழக அரசால் அனுமதிக்கப்படாத பாடப்புத்தகம், குறிப்பேடுகள் பயன்படுத்தக்கூடாது. உடல் எடையில், 10 சதவீதத்துக்கும் மேல், புத்தகப்பையின் எடை இருக்கக்கூடாது உள்ளிட்டவற்றை, அனைத்து கல்வி அலுவலர்களும் உறுதி செய்ய வேண்டும்.

இதை கண்காணிக்க, சார்நிலை அலுவலர்களை கொண்டு, சிறப்பு கண்காணிப்பு குழுவை உருவாக்கியும், பள்ளி ஆய்வின் போது, கவனம் செலுத்தவும், முதன்மைகல்வி அலுவலர்கள்

நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Helloo Salem Free Advertisements