நெற்பயிருக்கு காப்பீடு: நவ., 30 வரை வாய்ப்பு      முதல்வர் இன்று சேலம் வருகை      நிழற்கூடம் இல்லாததால் மாணவர்கள் அவதி      9ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பிழைகளை திருத்த உத்தரவு      மழையால் கொசு உற்பத்தி அதிகரிப்பு : கூடுதல் பணியாளர்கள் அவசியம்      சேலம் ஜங்சனில் ஓடும் ரெயிலில் இறங்கிய வாலிபர் கால் துண்டானது      சேலத்தில் இருந்து திருமலைக்கு செல்லவிருக்கும் பூமாலைகள்.      சேலம், நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம்      சேலத்தில் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி-விற்பனை பன்னீர்செல்வம் எம்.பி. தொடங்கி வைத்தார்      கூட்டுறவு சர்க்கரை ஆலை தேர்தல்: வெறும் 21.90 சதவீத ஓட்டுப்பதிவு      2ம் வகுப்பு வீட்டுப்பாடம்:கண்காணிக்க சிறப்புக்குழு      வானிலை மையம் கூறியபடி நேற்று துவங்கியது வடகிழக்கு பருவமழை      ரயில்வே பணியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தல்      கொங்கணாபுரத்தில் வேளாண்மை பொறியியல் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை      சேலம் மாநகராட்சி சார்பில் வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு ஊர்வலம்     
Search by alphabets :  A  |  B  |  C  |  D  |  E  |  F  |  G  |  H  |  I  |  J  |  K  |  L  |  M  |  N  |  O  |  P  |  Q  |  R  |  S  |  T  |  U  |  V  |  W  |  X  |  Y  |  Z
மக்கள் போராட்டம் எதிரொலி: கல்லுக்கட்டுக்கு பஸ் இயக்கம்
 

Date : 04/10/2018 Time : 12:42 Pm

 

ஆத்தூர்: மக்கள் போராட்டத்தால், கல்லுக்கட்டு மலைக்கிராமத்துக்கு, பஸ் இயக்கப்பட்டது. ஆத்தூர் அருகே, பைத்தூர் வழியாக, வானபுரம், தவளப்பட்டி மலை கிராமங்களுக்கு, அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. அந்த பஸ்சை, கல்லுக்கட்டு வரை இயக்க, கடந்த ஜூலை, 23ல், மா.கம்யூ., தலைமையில், கல்லுக்கட்டு மக்கள், போராட்டம் நடத்தினர். ஆனால், பாதை சரியில்லை என, போக்குவரத்து அதிகாரிகள் கூறினர். நேற்று, அரசு போக்குவரத்து கிளை பணிமனையில், குடியேறும் போராட்டம் நடத்துவதாக, மா.கம்யூ., கட்சியினர், மக்கள் அறிவித்தனர். இதையறிந்து, ஆத்தூர் எம்.எல்.ஏ., சின்னதம்பி, பஸ்சை கல்லுக்கட்டு வரை இயக்க, போக்குவரத்து அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். நேற்று, டவுன் பஸ் இயக்கப்பட்டதால், மலைக்கிராம மக்கள், போராட்டத்தை கைவிட்டனர். மேலும், சாலை வசதி கேட்டு, எம்.எல்.ஏ.,விடம் மனு அளிக்க காத்திருந்தனர். ஆனால், காரில் வந்த எம்.எல்.ஏ., சின்னதம்பி, திடீரென, கல்லுக்கட்டுக்கு சென்ற டவுன் பஸ்சில் ஏறிச்சென்றதால், மக்கள் ஏமாற்றமடைந்தனர்.

Helloo Salem Free Advertisements