நெற்பயிருக்கு காப்பீடு: நவ., 30 வரை வாய்ப்பு      முதல்வர் இன்று சேலம் வருகை      நிழற்கூடம் இல்லாததால் மாணவர்கள் அவதி      9ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பிழைகளை திருத்த உத்தரவு      மழையால் கொசு உற்பத்தி அதிகரிப்பு : கூடுதல் பணியாளர்கள் அவசியம்      சேலம் ஜங்சனில் ஓடும் ரெயிலில் இறங்கிய வாலிபர் கால் துண்டானது      சேலத்தில் இருந்து திருமலைக்கு செல்லவிருக்கும் பூமாலைகள்.      சேலம், நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம்      சேலத்தில் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி-விற்பனை பன்னீர்செல்வம் எம்.பி. தொடங்கி வைத்தார்      கூட்டுறவு சர்க்கரை ஆலை தேர்தல்: வெறும் 21.90 சதவீத ஓட்டுப்பதிவு      2ம் வகுப்பு வீட்டுப்பாடம்:கண்காணிக்க சிறப்புக்குழு      வானிலை மையம் கூறியபடி நேற்று துவங்கியது வடகிழக்கு பருவமழை      ரயில்வே பணியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தல்      கொங்கணாபுரத்தில் வேளாண்மை பொறியியல் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை      சேலம் மாநகராட்சி சார்பில் வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு ஊர்வலம்     
Search by alphabets :  A  |  B  |  C  |  D  |  E  |  F  |  G  |  H  |  I  |  J  |  K  |  L  |  M  |  N  |  O  |  P  |  Q  |  R  |  S  |  T  |  U  |  V  |  W  |  X  |  Y  |  Z
சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை
 

Date : 04/10/2018 Time : 11:45 Am

 

சேலம்: சேலம் மாவட்டத்தில், வெப்ப சலனத்தால், அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவில், சில இடங்களில் மழை கொட்டியது. அதிகபட்சமாக, ஏற்காட்டில், 14.8 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. ஆணைமடுவு அணை, 12, தம்மம்பட்டி, 3.4, ஓமலூர், 3.2, ஆத்தூர், 2 மி.மீ., மழை பெய்துள்ளது. நேற்று காலை, வானம் மேகம் மூட்டமாகவே காணப்பட்டது. சேலத்தில், மதியம், 12:00 மணிக்கு வெயில் சுட்டெரித்த நிலையில், 2:00 மணி முதல், மழை, விட்டு விட்டு, பரவலாக பெய்ததால், தாழ்வான பகுதிகளில், வழக்கம் போல் தண்ணீர் தேங்கி நின்றது. அதேநேரம், குளிர்ச்சியான காற்று வீசியதால், மக்கள் நிம்மதியடைந்தனர்.

 

தத்தளிப்பு: மல்லூரில் பெய்த கனமழையால், சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலை மற்றும் கால்வாயில் வந்த கழிவுநீருடன் மழைநீர், அங்குள்ள துணை அஞ்சலகத்துக்குள் புகுந்தது. ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்தனர். வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மூழ்கின. அலுவலகத்தில் இருந்த ஆவணங்களை, பாதுகாப்பான இடத்துக்கு மாற்றினர். இரண்டு மணிநேரத்துக்கு பின், தண்ணீர் வடிந்தது.

 

விவசாயிகள் மகிழ்ச்சி: சங்ககிரி சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த, 1ல், 27 மி.மீ., 2ல், 5.2 மி.மீ., மழை பெய்தது. இதனால், ஆழ்துளை கிணறு, விவசாய கிணறுகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இதை பயன்படுத்தி, விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில், சோளம், கம்பு, ராகி உள்ளிட்ட பயிர் வகைகளை விதைத்துள்ளனர்.

 

இயற்கை இடர்பாடு நீக்க ஆலோசனை: வடகிழக்கு பருவ மழையால் ஏற்படும் இயற்கை இடர்பாடுகளுக்கு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, இடைப்பாடி தாலுகா அலுவலகத்தில், ஒருங்கிணைப்பு குழு கூட்டம், நேற்று நடந்தது. தாசில்தார் கேசவன் தலைமை வகித்தார். அதில், மழை மற்றும் வெள்ளம் வரும்போது, எந்தெந்த பகுதிகளில் மக்கள் பாதிக்கப்படுவர், பாதிக்கப்படும் மக்களுக்கு, எவ்வாறு அரசு நலத்திட்டங்களை வழங்குவது, ஊரக வளர்ச்சி, தீயணைப்பு, வருவாய் துறைகள் மூலம், அதிகாரிகள் செய்து வரும் பணி குறித்து ஆலோசிக்கப்பட்டது. பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

 

Helloo Salem Free Advertisements