10/11/2016 Time:12:41 Am
ஏடிஎம்களில் புதிய ரூ.2 ஆயிரம், ரூ.500 நோட்டுகளை நிரப்பும் பணியை பலத்த பாதுகாப்புடன் மேற்கொள்ள நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. வங்கிகளில் பொது மக்களின் கூட்டத்தை கட்டுப் படுத்தவும் போலீஸார் முன் னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்.
ரிசர்வ் வங்கியில் இருந்து அனைத்து வங்கிகளுக்கும் புதிய ரூ.2 ஆயிரம், ரூ.500 நோட்டுகள் நேற்று காலை அனுப்பப்பட்டன. பணம் கொண்டு செல்லும் நேரம் மற்றும் வழிப்பாதை ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தன. போலீஸ் பாதுகாப்புடன் அனைத்து வங்கிகளுக்கும் நேற்றே அனுப்பி வைக்கப்பட்டன. ஏடிஎம் மையங் களில் இயந்திரத்தில் உள்ள பழைய ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டு களை எடுத்துவிட்டு, புதிய ரூ.2 ஆயிரம் மற்றும் ரூ.500 நோட்டுகள் இன்று நிரப்பப்படுகின்றன. இந்தப் பணியின்போது பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் தங்களி டம் உள்ள 1000, 500 ரூபாய் நோட்டுகளை மாற்றவும், டெபாசிட் செய்யவும் இன்று முதல் வங்கிக்கு படையெடுப்பர்.
இதனால், கூட்டத்தை கட்டுப் படுத்தவும், அசம்பாவித சம்பவங் களை தடுக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து காவல் நிலையங்களுக்கும் போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட் டுள்ளனர். அதன்படி, அனைத்து வங்கிகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
இன்று வங்கிக்கு வரும் அனைவரும் பணம் கொண்டு வருவார்கள் என்பதால் திருடர் களும் தங்களது கைவரிசையை காட்டத் தயாராக இருப்பார்கள். இதனால் வங்கிகளைச் சுற்றி தீவிரமாக கண்காணித்து திருடர் களை பிடிக்க போலீஸார் தயாராக இருக்கின்றனர்.
மேலும், வங்கிக்கு வரும் பொது மக்களும் கவனமாக இருக்கும்படி போலீஸார் வேண்டுகோள் விடுத் துள்ளனர். வங்கி, ஏடிஎம்களுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் நேற்று ஆலோசனையும் நடத்தினர்.
thanks to maalaimalar.com |